இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

அறந்தாங்கி

அறந்தாங்கியில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செவ்வாய்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என மனித நேய மக்கள் கட்சியின் ஒன்றிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On :13 மே 2013, 1:23 am IST

அறந்தாங்கியில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செவ்வாய்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என மனித நேய மக்கள் கட்சியின் ஒன்றிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சியின் ஒன்றிய செயற்குழுக் கூட்டம் ஒன்றிய செயலாளர் அ.கிரீன் முகமது தலைமையில் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது அதில் அறந்தாங்கி நகரில் மற்றொறு மண்ணெண்ணை வழங்கும் நிலையம் அமைக்க வேண்டும், அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்றம் புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்காமல் இருப்பதை கண்டித்தும், காரணியேந்தல் கிராமத்தில் புதிய ரேசன் கடை அமைக்க வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிர்வாகம் செயல்படுத்தாததை கண்டிóத்தும் செவ்வாய் கிழமை மாலை அறந்தாங்கி பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்துல்ஹமீது, துணைச் செயலாளர் பி.அஜ்மீர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் முன்னாள் மண்டல செயலாளர் இ.முபாரக் அலி சிறப்புரையாற்றினார்.

நகரச்செயலாளர் எம்.ஜகுபர் சாதிக், நகரப் பொருளாளர் எம்.கலந்தர் மைதீன், நகரத் துணைத் தலைவர் சாகுல் அமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக நகரத் தலைவர் எம்.பி.சேக் இஸ்மாயில் வரவேற்றார், நகரச்செயலாளர் எஸ்.அஜ்மீர் கான் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.