முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

இந்தியாவில் ஆராய்ச்சி, வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்

இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் வளர்சிக்காக அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றார் சென்னை தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் எஸ். மோகன்.

Updated On :13 மே 2013, 1:26 am IST

இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் வளர்சிக்காக அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றார் சென்னை தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் எஸ். மோகன்.

புதுக்கோட்டை மாவட்டம், லெனாவிலக்கு மவுன்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எட்டாவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மேலும் அவர் பேசியது:

 இன்று பட்டம் பெறும் மாணவர்கள் தங்கள் படிப்பையும், உழைப்பையும் நாட்டின் முக்கிய தொழில் நுட்ப, சமூக, பொருளாதார, சுற்றச் சூழல் ஆகிய பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர  வேண்டும்.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக ஆசிய கண்டத்தில் செலவிடப்படும் மொத்த தொகையில் 10 சதவிகிதம் தொகையை இந்தியாவில் செலவழிக்கப்படுகிறது.  இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 10 லட்சம் பேருக்கு 140 ஆராய்ச்சியாளர்களே உள்ளனர்.  ஆனால் அமெரிக்காவில் இதே எண்ணிக்கைக்கு 4,651 ஆராய்ச்சியாளர்கள்  உள்ளனர்.  இந்தியா அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்காக 3.7 பில்லியன் டாலர் செலவிடுகிறது, இந்தியாவை விட சீனா நான்கு மடங்கு அதிகமாக செலவிடுகிறது. ஆனால் அமெரிக்கா, அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்தியாவை விட 75 மடங்கு அதிகமாகச் செலவிடுகிறது.

சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் கடந்த பிறகும் நாம் என்ன சாதித்தோம் என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளவேண்டும்.  நாம் பலதுறைகளில் வெற்றிகளும் அதை விட பல தோல்விகளையும் கண்டுள்ளோம்.  அணு சக்திதுறை, விண்வெளி அறிவியல், மருத்துவம்,  வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் குறிப்பிட்ட அளவில் வெற்றி பெறாததற்கு நம் நாட்டின் மக்கள் தொகை, மத வேற்றுமை, பழமை வாதம் மட்டுமே காரணமில்லை, திறனற்ற ஆட்சி முறை, ஊழல், பதவியை தவறாகப் பயன்படுத்துதல், நெறியற்ற வாழ்வு, சமூக வளர்ச்சியில் அக்கறையின்மை ஆகியவையே காரணம் என்று உணர வேண்டும். நீங்கள் இன்று வாங்கிய பட்டத்தை சமுதாயமாற்றத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் பயன் படுத்த வேண்டும்.  ஏனெனில்  இளைஞர்களால்தான் நாடு வல்லரசாக உருவாகும் என்பது உறுதி என்றார். இதைத் தொடர்ந்து 243 இளங்கலை மற்றும் 22 முதுகலை மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களும், பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடத்தில் தோóச்சி பெற்ற 5 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயபாரதன்செல்லையா தலைமை வகித்தார்.  பேராசிரியர் விவியன் ஜெய்சன் இறைவணக்கம் இசைத்தார். இயக்குனர் ஜெ. ஜெய்சன் வரவேற்றார். முதல்வர் பி. பாலமுருகன் அறிமுகம் செய்தார். கல்லூரியின் துணைத்தலைவர் பிளாரன்ஸ், அறங்காவலர் ஜோனத்தன், பதிவாளர் அ. நிக்சன்அசாரியா ஆகியோர் வாழ்த்தினர். 

புதுக்கோட்டை மாவட்டம், லெனாவிலக்கு மவுன்ட்சீயோன் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவிக்கு  பட்டமளிக்கிறார், சென்னை தேசியதொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் எஸ். மோகன். உடன் கல்லூரித்தலைவர் ஜெயபாரதன்செல்லையா(வலது).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.