தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

ராயவரம் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு  விழா

புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம் சுப்பிரமணியன் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 1:27 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம் சுப்பிரமணியன் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், கல்லூரி அறக்கட்டளை நிர்வாகிகள் எம்.ஏ.எம். பழனியப்பன், எம். சுப்பிரமணியன்,முன்னாள் முதல்வர் கே. சுப்பிரமணியன், உடுமலைப்பேட்டை ஜி.வி.ஜி. கல்லூரி பேராசிரியர் ரேணுகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று வாழ்த்தினர்.

இதில், முன்னாள் மாணவர் சங்கச்செயலர் ஆர்.எம். அண்ணாமலை பங்கோற்று பேசியது: 1985-88 -ம் ஆண்டு வரை இக்கல்லூரி படித்த முன்னாள் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 180 பேர். 1988 -ம் ஆண்டில் மே. மாதம் இதே நாளில் கல்லூரியைவிட்டு வெளியே சென்ற நாங்கள் வெள்ளி விழாவைக் கொண்டாடவிருக்கிறோம். படித்து முடித்து வெளியே வந்தபின் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைவரும் சந்திப்பது என முடிவு செய்தோம். ஆனால், பொருளாதார சூழ்நிலை அதை நினைக்கக்கூட இடம் தரவில்லை. வாழ்க்கையில் முன்னேற்றத்தைக்காண  ஓடிக்கொண்டிருந்ததால்தான் தற்போது பெரும்பாலானோர் இன்று நல்ல நிலையில் உள்ளோம். ஆனால், பழைய நண்பர்களைத் தேடித்தேடி பார்த்து கடந்த 2006 -ல் 16  பேருடன் சந்திப்பு நடந்தது. இதையடுத்து 2012 ஆகஸ்ட்.31 -ல்  மேலும் பலரை ஒன்றுதிரட்டி முன்னாள் மாணவர்கள் சங்கத்தை உருவாக்க முடிந்தது. இதன் மூலம் கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளில் சிறந்த மதிப்பெண் எடுத்த, மாணவர்களுóக்கு விருதுகளும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்படவுள்ளது என்றார். சங்கத்தலைவர் எம். மதியழகன் முன்னிலை வகித்தார். விழாவை நிர்வாகிகள் வி. கோபாலகிருஷ்ணன், பாண்டியன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.