ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஊழியருக்கு இழப்பீடு கோரி மது ஆலை முற்றுகை

கந்தர்வகோட்டை அருகே நெஞ்சுவலியால் இறந்த மதுபான ஆலையின் லாரி ஓட்டுநர் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு  அந்த ஆலையை உறவினர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:11 pm

DIN

கந்தர்வகோட்டை அருகே நெஞ்சுவலியால் இறந்த மதுபான ஆலையின் லாரி ஓட்டுநர் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு  அந்த ஆலையை உறவினர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
கந்தர்வகோட்டை தாலுகா, கல்லாக்கோட்டையில் உள்ள கால்ஸ் மதுபான ஆலையில் தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், ராஜாளிவிடுதியைச் சேர்ந்த அ. குழந்தைராஜ் (48) லாரி ஓட்டுநராக இருந்தார்.
இவர் கடந்த மாதம் 15-ம் தேதி இந்த ஆலையிலிருந்து லாரியில் மது ஏற்றிக்கொண்டு, தருமபுரி குடோனுக்குச் சென்றிருந்தபோது நெஞ்சுவலி வந்து இறந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மதுபான ஆலை நிர்வாகத்திடம் இழப்பீடு கேட்டபோது,  அவர்கள் சரியான பதில் கூறவில்லையாம். 
இதனால் கோபமடைந்த  சுமார் 20-க்கும் மேற்பட்ட உறவினர்கள்  வியாழக்கிழமை கல்லாக்கோட்டை மதுபான ஆலை முன் முற்றுகையிட்டனர்.  தகவலறிந்த   மதுபான ஆலை மேலாளர், காவல் ஆய்வாளர் மன்னர்மன்னன்  உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.