"இந்தியத் தலைவர்களை சிந்திக்க வைத்தது சோவியத் புரட்சி'
இந்தியத் தலைவர்கள் அனைவரையும் சிந்திக்க வைத்தது சோவியத் புரட்சி என்றார் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனர், தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன்.


இந்தியத் தலைவர்கள் அனைவரையும் சிந்திக்க வைத்தது சோவியத் புரட்சி என்றார் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனர், தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன்.
புதுகையில் இந்திய கம்யூ. கட்சி சார்பில் புதன்கிழமை நடைபெற்ற நவம்பர் புரட்சி தின நூற்றாண்டு விழா, "மூலதனம்' நூல் வெளியான 150 ஆவது ஆண்டு விழா, கார்ல்மார்க்ஸ் 200 ஆவது பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழாவில் பங்கேற்று "நவம்பர் புரட்சியும் இந்திய விடுதலையும்' எனும் தலைப்பில் அவர் பேசியது:
1917 -இல் நடந்த ரஷியப் புரட்சியின் நேரடி களத் தொகுப்பு தான் "உலகை உலுக்கிய 10 நாட்கள்' என்ற நூல். புரட்சிக்களத்தில் நின்று எழுதிய அமெரிக்க இளைஞன் ஜான்ரீடு.
ரஷியப்புரட்சி இந்தியாவில் உள்ள காந்தி, நேரு போன்ற தலைவர்களை சிந்திக்க வைத்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் திரிசூலம் என பால கங்காதார திலகர், விபின் சந்திரபால், லாலா லஜபதி ராய் ஆகியோரையும், தமிழக அளவில் மகாகவி பாரதி, வ.உ.சி., சுப்பிரமணிய பாரதி ஆகியோரையும் குறிப்பிடலாம்.
சோவியத் புரட்சிக்குப்பிறகு, வன்முறை கூடாது எனக் கருதுவதும் கம்யூனிஸ்ட்டுகள்தான். புரட்சியை வெற்றி கொள்ள ரத்தம் சிந்த வேண்டும். நவ. 7-இல் சோவியத் புரட்சி நடந்தது . நவ. 8-இல் முதல் அறிவிப்பே சமாதானம், உழுபவருக்கே நிலம் சொந்தம் என்பன உள்ளிட்ட பிரகடனங்களை உலகுக்கு அறிவித்தது. அந்தப்பிரகடனங்களை இந்த மண்ணில் தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் கம்யூனிஸ்ட்டுகள் தான் என்றார்.
முன்னதாக, மாநிலக்குழு உறுப்பினர் கே.ஆர். தர்மராஜன் வரவேற்றார்.
மார்க்சிய அழகியல் -தலைப்பில் தமிழ்ப்பேராசிரியர் பழனி இராகுலதாசன் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி க. செல்வராஜ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச்செயலர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் வாழ்த்தினர். நகரச்செயலர் எம்.எம். ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...