/

குழந்தைத் திருமணம் மற்றும்  பாதுகாப்பு விழிப்புணர்வு

பொன்னமராவதி குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சைல்டுலைன் 1098 விழிப்புணர்வு பதாகை நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:32 pm

DIN

பொன்னமராவதி குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சைல்டுலைன் 1098 விழிப்புணர்வு பதாகை நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி ராயல் அரிமா சங்கம் மற்றும் ஆர்டிஒ தொண்டு நிறுவனம் ஆகியன இணைந்து நடத்திய நிகழ்வில் பொன்னமராவதி பேருந்து நிலையம் மற்றும் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் அருகே சைல்டு லைன் 1098 விழிப்புணர்வு பதாகை நிறுவப்பட்டது.  பொன்னமராவதி பேருந்துநிலையத்தில் விழிப்புணர்வு பதாகையை காவல் ஆய்வாளர் (பொறுப்பு)மனோகரன் திறந்துவைத்தார். குழந்தைகளுக்கான பிரச்னைகள் மற்றும் உரிமைகள், குழந்தை திருமணத்தால் நேரும் பாதிப்புகள் குறித்து சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ப. நதியா விளக்கினார். ராயல் அரிமா சங்கத் தலைவர் எம். சந்திரன், செயலர் வி. கமலக்கண்ணன், பொருளாளர் டிவிஎஸ்.மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.