சைல்டுலைன் சார்பில் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் ஆய்வு
சைல்டு லைன் (1098) சார்பில் குழந்தை தொழிலாளர், பிச்சை எடுக்கும் குழந்தைகள் ஆய்வு மற்றும் குழந்தைகளுக்கு ராக்கி அணிவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


சைல்டு லைன் (1098) சார்பில் குழந்தை தொழிலாளர், பிச்சை எடுக்கும் குழந்தைகள் ஆய்வு மற்றும் குழந்தைகளுக்கு ராக்கி அணிவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை சைல்டுலைன் 1098-ன் மூலம் குழந்தைகள் தினம் வார விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக வியாழக்கிழமை புதுக்கோட்டை சைல்டுலைன் 1098 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்ஆ. ஜோதிராஜ் தலைமையில் சைல்டுலைன் 1098 பணியாளர்கள் லூர்து மேரி, அருணா, பபியோலோ மேரி, அருள்மேரி, ஜாக்குலின், கிறிஸ்டினா, அருள் வினித், குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர் வைரம், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர் அழகிரிராஜ், தொழிலாளர் நல ஆய்வாளர் குணசீலன் ஆகியோர் புதிய பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, பிச்சை எடுத்துவந்த 2 குழந்தைகள், ஜோசியம் பார்த்துவந்த 2 குழந்தைகளைக் கண்டறிந்து குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களின் பெற்றோரை வரவழைத்து ஆற்றுப்படுத்தி தொடர்ந்து குழந்தைகளை படிக்க வைக்குமாறு உறுதி எழுதி வாங்கி அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், பேருந்துகளில் சைல்டுலைன் -1098 குறித்த விழிப்புணர்வு வில்லைகள் ஒட்டப்பட்டது.
தொடர்ந்து சத்தியமூர்த்தி நகர் உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் ராக்கி அணிவித்து குழந்தைகள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இதில், மாவட்ட நன்னத்தை அலுவலர் கணேசன், குழந்தைகள் நல குழு உறுப்பினர் ராக்கேல் ஜெயா, கலந்து கொண்டனர். புதுகை பல்நோக்கு சமூக சேவை அமைப்பின் நிர்வாக அலுவலர் எஸ். மத்தியாஸ் வரவேற்றார். சைல்டுலைன் 1098 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ. ஜோதிராஜ் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...