எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திண்டுக்கல்லில் மாநில சைக்கிள் போட்டி: செந்தூரான் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை அருகேயுள்ள செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியும்,  புதுக்கோட்டை மாவட்ட சைக்கிள் அசோசியேஷனும்  இணைந்தும்

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:51 am

DIN

புதுக்கோட்டை அருகேயுள்ள செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியும்,  புதுக்கோட்டை மாவட்ட சைக்கிள் அசோசியேஷனும்  இணைந்தும் மாநில அளவிலான சைக்கிள் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
 புதுக்கோட்டை செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் நடை பெற்ற நிகழ்வுக்கு, கல்லூரியின் தலைவர் ராம. வயிரவன் தலைமை வகித்து மாணவர்களை வழியனுப்பி வைத்தார்.   திண்டுக்கல்  என்.பி.ஆர். கல்லூரியில் அக். 13,  14,  15 ஆகிய நாள்களில்  நடைபெற உள்ள  மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளவதற்காக  மாணவர்கள் 13 பேர் இங்கிருந்து  சைக்கிள் பயணத்தை   மேற்கொண்டனர்.
நிகழ்வில், கல்லூரி முதல்வர் எஸ்.ஜி. செல்வராஜ், முதன்மைச் செயல் அலுவலர் எஸ். கார்த்திக், பயிற்சியாளர்கள் அசோக் ,  பாலு , ஆறுமுகம் , சந்திரசேகர், நடராஜன், கல்லூரி நிர்வாகிகள் சோம. நடராஜன், செல்வராஜ், தி. தியாகராஜன் உள்ளிட்டோர்  வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.  உடற்கல்வி இயக்குநர் பாலமுருகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.