வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஆலங்குடி அருகே மரம் விழுந்து தொழிலாளி சாவு

புதுக்கோட்டை மாவட்டம்,  ஆலங்குடி அருகே மரம் விழுந்ததில் மரம் வெட்டும் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:53 am

DIN

புதுக்கோட்டை மாவட்டம்,  ஆலங்குடி அருகே மரம் விழுந்ததில் மரம் வெட்டும் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி மாங்குட்டிபட்டியைச் சேர்ந்தவர் ஆர்.சேகர்(40). மரம் வெட்டும் தொழிலாளி. இவர், நெடுவாசல் அண்ணாநகர் பகுதியில் அய்யாக்கண்ணு என்பவரது தோப்பில் உள்ள மரங்களை சக தொழிலாளிகளுடன் வெட்டும் பணியில்  புதன்கிழமை ஈடுபட்டார் .
அப்போது, எதிர்பாராதவிதமாக  சேகர் மீது மரம் விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த சேகர், ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து வடகாடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.