திண்டுக்கல்லில் மாநில சைக்கிள் போட்டி: செந்தூரான் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை அருகேயுள்ள செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியும், புதுக்கோட்டை மாவட்ட சைக்கிள் அசோசியேஷனும் இணைந்தும்


புதுக்கோட்டை அருகேயுள்ள செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியும், புதுக்கோட்டை மாவட்ட சைக்கிள் அசோசியேஷனும் இணைந்தும் மாநில அளவிலான சைக்கிள் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் நடை பெற்ற நிகழ்வுக்கு, கல்லூரியின் தலைவர் ராம. வயிரவன் தலைமை வகித்து மாணவர்களை வழியனுப்பி வைத்தார். திண்டுக்கல் என்.பி.ஆர். கல்லூரியில் அக். 13, 14, 15 ஆகிய நாள்களில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளவதற்காக மாணவர்கள் 13 பேர் இங்கிருந்து சைக்கிள் பயணத்தை மேற்கொண்டனர்.
நிகழ்வில், கல்லூரி முதல்வர் எஸ்.ஜி. செல்வராஜ், முதன்மைச் செயல் அலுவலர் எஸ். கார்த்திக், பயிற்சியாளர்கள் அசோக் , பாலு , ஆறுமுகம் , சந்திரசேகர், நடராஜன், கல்லூரி நிர்வாகிகள் சோம. நடராஜன், செல்வராஜ், தி. தியாகராஜன் உள்ளிட்டோர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர். உடற்கல்வி இயக்குநர் பாலமுருகன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...