பொன்னமராவதி அருகே மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு சுகாதார விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், புத்தாஸ் வீரக்கலைகள் கழகம் இணைந்து நடத்திய விழாவிற்கு பொன்னமராவதி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சே.ராமதிலகம் தலைமை வகித்தார். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ச.லதாதேவி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பூச்சி வரவேற்றார். பள்ளி மாணவர்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி, தூய்மையை கடைபிடிக்கச் செய்த தலைமையாசிரியர் சதாசிவம் மற்றும் ஆசிரியர்களுக்கு சுகாதார விருதுகளை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மண்டல திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வழங்கினார்.
மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு குழு நிர்வாகி பிரபாகரன், நேரு யுவகேந்திரா மாவட்டக் கணக்காளர் நமச்சிவாயம், புத்தாஸ் வீரக்கலைகள் கழக நிர்வாகி கார்த்திகேயன், முன்னாள் ஊராட்சித் தலைவர் ப.முருகேசன் ஆகியோர் பேசினர்.
ஆசிரிய பயிற்றுநர் சக்திவேல் பாண்டி, தொடக்கக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர் விக்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் பழனிச்சாமி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








