தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

காவிரி மேலாண்மை வாரியம் கோரி கடலில் இறங்கி மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோட்டைப்பட்டனம் அருகே மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:52 am

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோட்டைப்பட்டனம் அருகே மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம்,  கோட்டைப்பட்டனம் அருகே வண்ணிச்சிப்பட்டனத்தில் கடலில் 
இறங்கி நடைபெற்ற போராட்டத்துக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்டப் பொருளாளர் சேக் இஸ்மாயில் தலைமை வகித்தார்.  
செயலாளர் முபாரக் அலி, மாநில தகவல் தொழில் நுட்ப அணிச் செயலாளர் அ.ஹாரிஸ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் அஜ்மீர் அலி, செய்யது அபுதாகீர், அறந்தாங்கி நகர அவைத் தலைவர் அப்துல் ஹமீது, நகரச் செயலாளர் ஜகுபர் சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.