புதுகை மாவட்டத்தில் உள்ள அம்மா மருந்தகங்களில் அனைத்து மருந்துகளும் 15% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் சு.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசால் போலி மருந்து, மாத்திரைகளை முற்றிலும் ஒழித்திடவும், குறைந்த விலையில் தரமான மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்கிடவும் கூட்டுறவுத் துறையின் மூலம் அம்மா மருந்தகங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், திலகர் திடல் , டிவிஎஸ் கார்னர், விராலிமலை , அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம் ஆகிய 7 இடங்களில் அம்மா மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து ஆங்கில மருந்துகள், ஆயுர்வேத சித்தா மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள், அனைத்து விதமான தடுப்பூசிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அம்மா மருந்தகங்களில் குறைந்த விலையில் தரமான மருந்துகள், பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும், அம்மா மருந்தகத்தில் நீரிழிவு உள்ளிட்ட அனைத்து மருந்துகளுக்கு 15 சதவீதத் தள்ளுபடி, ஆயுர்வேத, சித்தா மருந்துகளுக்கு 10 சதவீதம், பொதுவான பொருட்களுக்கு 5 சதவீதம் என தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படுகிறது.
அம்மா மருந்தகம் காலை 9 மணி முதல் இரவு 10 வரை செயல்படுவதுடன், இங்கு வாங்கப்படும் மருந்துகளுக்கான ரசீதுகள் அனைத்தும் கணினி மூலம் வழங்கப்படுகிறது. தரமான, சரியான விலையில் அம்மா மருந்தகத்தில் மருந்துகள் வழங்குவதை பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்!

ஆர்சிபி வெற்றிக்காக யாக சாலை பூஜை நடத்திய ரசிகர்கள்!

திருவள்ளுவருக்கு காவி உடை; ஆளுநரின் அராஜகமான செயலாகும்: வைகோ கண்டனம்

சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


