ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

பொன்னமராவதி வட்டார வள மையம் ஆய்வு

பொன்னமராவதி வட்டார வள மையம் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா. வனஜா எந்தவித முன்னறிவுப்புமின்றி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:26 am IST

பொன்னமராவதி வட்டார வள மையம் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா. வனஜா எந்தவித முன்னறிவுப்புமின்றி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடக்கமாக வட்டார வள மையத்தின் வைப்பறை, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் அறை, கழிப்பறை, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்கும் அறை ஆகியவற்றைப் பார்வையிட்டார். தொடர்ந்து ஆசிரியர் பயிற்றுநர்களின் நகர்வுப் பதிவேட்டினைப் பார்வையிட்டு அதில் குறிப்பிட்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, நகர்வுப் பதிவேட்டில் உள்ளபடி ஆசிரியர் பயிற்றுநர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்றிருக்கிறார்களா என ஆய்வு செய்தார். மேலும், ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து பார்வையிட அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக நடைபெறும் பகல்நேர பாதுகாப்பு மையத்தைப் பார்வையிட்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் மைய ஆசிரியை பொன்னம்மாள், உதவியாளர் அம்சவள்ளி ஆகியோரைப் பாராட்டினார். தொடர்ந்து உதவி தொடக்க கல்வி அலுவலகத்தின் செயல்பாட்டினை ஆய்வு செய்தார்.  ஆய்வின்போது, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி. பழனிவேலு, பொன்னமராவதி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சே. ராமதிலகம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.