அன்னவாசல் அருகேயுள்ள விளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சேட் சாயூப் (51). இவர் விளத்துப்பட்டி ஊராட்சியில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி இயக்குபவராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி மும்தாஜ் பேகத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. மருத்துவர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதாகக் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, சேக் சாயூப் கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்ட நிலையில், கடந்த திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது, பூச்சிமருந்தை குடித்து மயங்கியுள்ளார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அன்னவாசல் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முத்தரப்பு தொடர்: இந்திய அணியில் ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் மாளிகையாக மாற்ற முயற்சி: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


