புதுகை மாவட்டத்தில் 22 மதுக் கடைகள் மூடல்
உள்ளாட்சி சாலைகளாக மாற்றப்படாமல் இயங்கிவரும் டாஸ்மாக் மதுக் கடைகளை மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவைத்


உள்ளாட்சி சாலைகளாக மாற்றப்படாமல் இயங்கிவரும் டாஸ்மாக் மதுக் கடைகளை மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் அப்பகுதியில் இயங்கிவரும் மதுக்கடைகளை மூடவேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில், உள்ளாட்சி சாலைகளாக மாற்றப்படாமல் இயங்கிவந்த 22 மதுக்கடைகளை டாஸ்மாக் நிர்வாகம் மூட நடவடிக்கை மேற்கொண்டது.
இதில், புதுக்கோட்டை சாந்தநாதபுரம் பகுதி, சந்தைப்பேட்டை, பழனியப்பா முக்கம், டி.வி.எஸ், முக்கம், திருவப்பூர் உள்ளிட்ட இடங்களில் இயங்கிவந்த 6 மதுக்கடைகளும், அறந்தாங்கி பகுதியில் 10 மதுக்கடைகளும், ஆலங்குடியில் 1, கீரமங்கலத்தில் 2, கீரனூர் பகுதியில் இயங்கிவந்த 3 மதுக்கடைகள் என மொத்தம் 22 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...