எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

கேரளத்துக்கு உதவுவதற்காக மனிதநேய ஜனநாயகக் கட்சி நிவாரண நிதி வசூல்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மனித நேய ஜனநாயகக் கட்சி சார்பில் கேரள நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் பெறப்பட்டு வருகிறது. 

Updated On :20 ஆகஸ்ட் 2018, 10:09 am IST

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மனித நேய ஜனநாயகக் கட்சி சார்பில் கேரள நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் பெறப்பட்டு வருகிறது. 
கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் வீடு, உடைமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு கட்சியின் மாவட்டப் பொருளாளர் சேக் இஸ்மாயில் தலைமையில் அறந்தாங்கி சோதனைச் சாவடி, வாகைமரம், பெரியகடைவீதி, கட்டுமாவடி முக்கம், வட்டாட்சியர் அலுவலகச் சாலை, காந்திபூங்கா சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகளில் நிதி, நிவாரணப் பொருள்கள்  சேகரிக்கப்பட்டது.
கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.முபாரக் அலி, துணை செயலாளர்கள் அஜ்மீர்அலி, ஒளிமுகமது, சையது அபுதாகீர், தகவல் தொடர்பு அணி செயலாளர் அப்துல் ஜமீன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, 4 நாள்கள் திரட்டப்படும் நிவாரணப் பொருள்கள் மாநில நிர்வாகிகளிடம் ஒப்படைத்து கேரளாவிற்கு அனுப்பப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.