மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

தொழிலதிபரிடம் கடன் பெற்று தருவதாகக் கூறி ரூ.1.9 கோடி மோசடி: தம்பதி மீது வழக்கு

தொழிலதிபரிடம் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.1.9 கோடி மோசடி செய்ததாக தம்பதி மீது ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதியப்பட்டது. 

Updated On :20 ஆகஸ்ட் 2018, 10:09 am IST

தொழிலதிபரிடம் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.1.9 கோடி மோசடி செய்ததாக தம்பதி மீது ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதியப்பட்டது. 
மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த மயில்சாமி நடராஜன் என்பவரிடம் குறைந்த வட்டிக்கு வெளியாட்களிடம் கடன் பெற்றுத் தருவதாக புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரைச் சேர்ந்த கே.செந்தில்வேல்(44), அவரது மனைவி வெள்ளையம்மாள் ஆகியோர் கூறியுள்ளனர். 
இதனை நம்பிய மயில்சாமி நடராஜன் ரூ.1.9 கோடியை செந்தில்வேல், அவரது மனைவி வெள்ளையம்மாளிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட இருவரும் தெரிவித்தபடி கடன் பெற்றுத் தராததோடு, வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸில் மயில்சாமி நடராஜன் புகார் அளித்தார். அதன்பேரில், செந்தில்வேலன், வெள்ளையம்மாள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.ஏற்கெனவே, திருச்சியைச் சேர்ந்த இரும்பு வியாபாரியிடம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த புகாரில் கடந்த வாரம் செந்தில்வேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள வெள்ளையம்மாள் தேடப்பட்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.