ஆவுடையார்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டிவந்த இளைஞர் உயிரிழந்தார்.
ஆவுடயார்கோவில் அருகே தாளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசா (24). இவர், தனது இருசக்கர வாகனத்தில் ஆவுடையார்கோவிலில் இருந்து தாளனூருக்கு வரும்வழியில் பூங்குடி என்ற இடத்தில் எதிரே விறகு ஏற்றிவந்த சரக்கு ஆட்டோ மோதியதில் ராசா பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆவுடையார்கோவில் காவல் உதவி ஆய்வாளர் அருள் பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி!

ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!

ஆடி அமாவாசை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!


