தேக்வாண்டா, குத்துச்சண்டை உள்ளிட்ட மாநில, மண்டலப் போட்டிகளில் வென்ற புதுக்கோட்டை வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலாள சப்-ஜூனியர் மற்றும் கேடட் தேக்வாண்டோ போட்டி அண்மையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் 10க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் வீராங்கனை சாரிகா முதலிடம் பிடித்தார்.
இதேபோல பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான தேக்வாண்டா போட்டியில் கலந்து கொண்ட வீரர் மலையப்பன் 3ஆம் இடம் பிடித்தார். பள்ளி கல்வித்துறை சார்பில் திருச்சியில் நடைபெற்ற மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வீராங்கனை சுஜிதா 2ஆம் இடம் பிடித்தார். இதேபோல மணப்பாறையில் நடைபெற்ற மண்டல அளவிலான சிலம்பம் போட்டியில் பிரிதா 2வது இடம் பிடித்தார்.
இதைத்தொடர்ந்து மாநில மற்றும் மண்டல அளவில் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழகத் தலைவர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
இதில் புத்தாஸ் வீரக்கலைகள் கழக நிறுவனர் சேதுகார்த்திகேயன், வீரர், வீராங்கனைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







