புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காய்கறி வேன் கவிழ்ந்து  மூவர் காயம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மினி வேன் ஓட்டுநர் ரெங்கசாமி(46). இதே ஊரைச் சேர்ந்த

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:07 am

DIN

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மினி வேன் ஓட்டுநர் ரெங்கசாமி(46). இதே ஊரைச் சேர்ந்த எ.குமார், கே. குமார் ஆகியோர் ஞாயிற்றுகிழமை திருச்சியில் இருந்து காய்கறி மூட்டைகளை மினி வேனில் ஏற்றிக்கொண்டு, கந்தர்வகோட்டை சாலையில் கோமாபுரம் கிராமம் வந்து கொண்டிருந்த
னர். அப்போது, சாலையில் குவிந்து கிடந்த எள்செடியில் மோதி மினிவேன் சாலையின் நடுவில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் ரெங்கசாமி, குமார் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் காயமடைந்தவர்களை மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.