பல்கலை.யில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.25 லட்சம் மோசடி: ஒருவர் கைது
அண்ணா பல்கலை.யில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.25 லட்சம் மோசடிசெய்ததாக புதுகை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த ஒருவரை குற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.


அண்ணா பல்கலை.யில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3.25 லட்சம் மோசடிசெய்ததாக புதுகை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த ஒருவரை குற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் வி. ரவிச்சந்திரன்(48). இவரிடம், அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி, புதுக்கோட்டை ஜீவா நகரைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி உஷாராணி, இலுப்பூர் அருகேயுள்ள சங்கராப்பட்டியைச் சேர்ந்த பி.குமாரசாமி(55) ஆகியோர் கடந்த 2015 ஆம் ஆண்டு ரூ.3.25 லட்சம் வாங்கினாராம். ஆனால், மூன்றாண்டுகளாகியும் ரவிச்சந்திரனுக்கு வேலையும் வாங்கித்தராமலும், கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமலும் இருந்து வந்தனர். இதுகுறித்து ரவிச்சந்திரன் அளித்த புகாரைத்தொடர்ந்து புதுகை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் குமாரசாமியைக் கைது செய்தனர். மேலும், உஷாராணியைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...