கந்தர்வக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.
கந்தர்வக்கோட்டையை அடுத்த ஆதனக்கோட்டை, புதுப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஆதனக்கோட்டை, மின்னத்தூர், கணபதிபுரம், பெருங்களுர், தொண்டமான்ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான்குடி, காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி, கந்தர்வக்கோட்டை, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, சிவன்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனூர், பல்லவராயன்பட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்சாரம் இருக்காது என மின்சாரவாரிய கந்தர்வகோட்டை உதவிசெயற்பொறியாளர் எஸ். சேவியர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.