மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயிலில் பால்குட விழா
பொன்னமராவதி அருகே மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயிலில் பால்குடம், பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


பொன்னமராவதி அருகே மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயிலில் பால்குடம், பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற மேலத்தானியம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பால்குடம், பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழா ஜூலை 1ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக, ஞாயிற்றுக்கிழமை உசிலம்பட்டி, ஆவாம்பட்டி, முள்ளிப்பட்டி, சூரப்பட்டி, படுதினிப்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, மேலத்தானியம், அம்மாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சாத்தியும், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் போலீஸார் செய்திருந்தனர். திங்கள்கிழமை (ஜூலை 9) தேரோட்டம் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...