அன்னவாசலில் ஜல்லிக்கட்டு; 27 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பார்வையாளர் உள்பட 27 பேர் காயமடைந்தனர்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பார்வையாளர் உள்பட 27 பேர் காயமடைந்தனர்.
மாசித் திருவிழாவை முன்னிட்டு  நடைபெற்ற ஜல்லிக்கட்டை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், ஆட்சியர் சு. கணேஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
ஜல்லிக்கட்டில்  திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த  999 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்க  400 பேர் களத்தில் இருந்தனர்.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த பல காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் பிடிபடாமல் சென்றன.  காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடா காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி மாடுபிடி வீரர்கள் குணசேகரன், சுப்பிரமணியன் உள்ளிட்ட 10 பேர்,  பார்வையாளர்கள் ராஜேந்திரன், தினேஷ், பாலு  உள்ளிட்ட 17 பேர் என மொத்தம் 27 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தாற்காலிக மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். போட்டியைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.  கந்தர்வகோட்டை எம்எல்ஏ க. ஆறுமுகம், வருவாய்க் கோட்டாட்சியர் ஆர். ஜெயபாரதி, கால்நடைத் துறை இணை இயக்குநர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com