மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அன்னவாசல் விருதபுரீஸ்வரர் கோயில் மாசி தேரோட்டம்

அன்னவாசல் விருதபுரீஸ்வரர் கோயில் மாசி தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர்.              

News image
Updated On :1 மார்ச் 2018, 2:50 am

DIN

அன்னவாசல் விருதபுரீஸ்வரர் கோயில் மாசி தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர்.                               
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் விருதபுரீஸ்வரர் கோயில் பங்குனி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
நிகழாண்டு விழா கடந்த பிப். 20-ல் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது, தொடர்ந்து தினமும் காலை, மாலைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்ச்சி புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட விருதபுரீஸ்வரர் தேரில் எழுந்தருளி தேர்வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. 
பக்தர்களின் சரணகோஷத்துடன் அன்னவாசலின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த திருத்தேர் 9  மணிக்கு நிலையை அடைந்தது.  
பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பி. கோபாலசந்திரன் தலைமையில் காவல் ஆய்வாளர் சுமதி (அன்னவாசல்)  மேற்பார்வையில் 50-க்கும்  மேற்பட்ட போலீஸார் மற்றும் ஊர் காவல்படையினர் செய்தனர்.  விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை செயல் அலுவலர் ச. ராமராஜா, மேற்பார்வையாளர் ரெ. மாரிமுத்து மற்றும் உபயதாரர்கள் செய்தனர்.
அன்னதானம் அளித்த இஸ்லாமியர்கள்:
மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக தேர்திருவிழாவையொட்டி அன்னவாசல் ஜமாத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒன்று கூடி  அன்னதான விழா நடத்தினர். இவ்விருந்தில் அறுசுவை உணவு சுமார் 5 ஆயிரம் பேருக்கு பரிமாறப்பட்டது.
 இதுகுறித்து அன்னதான ஏற்பாடு செய்த அன்னவாசல் ஜமாத் துணை தலைவர் முகமது ரிசா,  முகமது உசேன் கூறியது : 
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும்விதமாகவே  இந்த அன்னதானத்தை நடத்துகிறோம். கடந்தாண்டு அன்னதானத்தில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த  ஆண்டு  10 ஆயிரம் பேருக்கு உணவு ஏற்பாடு செய்துள்ளோம். இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தியது எங்களுக்கு பெரும் மகிழ்வைத் தருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.