நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்

மாணவர்கள் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்  நடிகர் பார்த்திபன்.
Updated on
1 min read

மாணவர்கள் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்  நடிகர் பார்த்திபன்.
புதுக்கோட்டை அருகேயுள்ள திருக்கோகர்ணம்  வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  அண்மையில்  நடைபெற்ற ஆண்டுவிழாவுக்கு அழகப்பா பல்கலை. துணைவேந்தர் எஸ். சுப்பையா  தலைமை வகித்தார்.  பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி வரவேற்றார். மாவட்டக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி,  நடிகர் பார்த்திபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து நடிகர் பார்த்திபன் பேசியது:எந்த ஒரு விஷயத்தையும் நகைச்சுவையோடு அணுகவேண்டும். பெற்றோர்கள் மாணவர்களிடம் பாடங்களை திணிக்க முயற்சித்து பெறும் மதிப்பெண்களை விட,  அவர்களாகவே விரும்பிப் படித்துப்பெறும் மதிப்பெண்கள் உண்மையானதாக இருக்கும். சானை பிடித்தால் தான் கத்தி கூராக இருக்கும், அதைப் போல் ஆசானைப் பிடித்தால்தான் புத்தி கூராக இருக்கும். மாணவர்களிடம் நுணுக்கமான அறிவும் புத்திசாலித்தனமும் ஒளிந்திருக்கிறது. அதை நாம் கண்டெடுக்க வேண்டும். 
நல்ல நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள், யாரைப் பார்த்தும் பொறாமைப்படாதீர்கள். அது உங்களை அழித்துவிடும், நகைச்சுவை உங்களை வளர்த்து விடும் என்றார். 
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி, நிர்வாக இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, காவியா மூர்த்தி, துணை முதல்வர் குமாரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com