மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

தையல் கூட்டுறவு சங்க அலுவலகம் முற்றுகை

புதுக்கோட்டை தையல் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடாக பதவிகளை பெற முயற்சி நடைபெறுவதாக கூறி,  வேட்பாளர்கள்  புதன்கிழமை

Updated On :29 மார்ச் 2018, 2:04 am

புதுக்கோட்டை தையல் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடாக பதவிகளை பெற முயற்சி நடைபெறுவதாக கூறி,  வேட்பாளர்கள்  புதன்கிழமை அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கத்தின் 7 இயக்குநர் பதவிகளுக்காக  அதிமுக சார்பில் 7 பேரும்,  திமுக சார்பில் 7,  சிஐடியு சார்பில் 1 என 15 பேர் வேட்புமனு செய்துள்ளனர்.
ஆனால்,  அதிமுகவினர் அதிகாரிகளின் துணையோடு, முறைகேடாக  பதவிகளை பெற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டும் உரிய பதில் இல்லையாம். இதனால்,  புதுக்கோட்டை தையல் கூட்டுறவு சங்க அலுவலகம் அருகே சிஐடியுவின் மாவட்டத் தலைவர் செல்வராஜ்,  பொதுச்செயலாளர் முகமது அலிஜின்னா,  திமுக நிர்வாகி எம்.எம்.பாலு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.