புதுக்கோட்டை அரசு இசைப் பள்ளியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க 7ஆம் வகுப்பு தேர்ச்சியும், நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய வகுப்புகளில் சேர விரும்புவோர் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 12 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலம் 3 ஆண்டுகள்.
பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அரசு சான்றிதழ் படிப்பான இந்தப் பயிற்சியில் அரசுத் துறையில் வேலை வாய்ப்புகளும், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்களில் வாய்ப்புகள் பெறலாம்.
இசைப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இலவசப் பேருந்து, தங்கும் வசதி, கல்வி உதவித் தொகை , சீருடை, காலணி, மிதிவண்டி உள்ளிட்ட சலுகைகள் அரசு விதிகளின்படி வழங்கப்படும். இதுதவிர, அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 ஊக்கத் தொகை வழங்கப்படும். விரும்பமுள்ள மாணவ, மாணவிகள் புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியரை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திராவிட இயக்கத்தை பாஜகவினர் ஒருபோதும் அசைக்க முடியாது! வைகோ

திருவண்ணாமலை கிரிவலம் சென்றிருப்போர் கவனத்துக்கு..

வணிக சிலிண்டர் விலை உயர்வு! மோடி அரசுக்கு பணம் பறிக்க மட்டுமே தெரியும்: காங்கிரஸ்
முறைகேடு புகார்: வாக்குப்பெட்டி அறையில் 4 மணி நேரம் இருந்த மமதா பானர்ஜி!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

