தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவுஉழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர்: வைகோசித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!
/

லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் சாவு

விராலிமலையில் லாரி மீது கார் மோதியதில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :21 மே 2018, 1:52 am

விராலிமலையில் லாரி மீது கார் மோதியதில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருச்செந்தூர் சாரமேட்டைச் சேர்ந்த ஆறுமுநயினார் மனைவி சரஸ்வதி(60), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நவீன்குமார்(22) ஆகிய இருவரும் திருச்செந்தூரில் இருந்து திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை நவீன் ஓட்டினார்.
விராலிமலை நான்கு வழிச்சாலையில் மாதிரிப்பட்டி பிரிவு சாலை அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சரஸ்வதி நிகழ்விடத்தில் இறந்தார். காயமடைந்த நவீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விராலிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.