சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

இளம்பெண் சாவு: இரு பெண் உள்பட  4 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே லெக்கணாப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராமையா. இவரது மனைவி முத்துமாரி(27).

Updated On :21 மே 2018, 1:50 am

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே லெக்கணாப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராமையா. இவரது மனைவி முத்துமாரி(27). 5 ஆண்டுக்கு முன்பு திருமணமான இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
முத்துமாரிக்கும், அருகே வசித்து வரும் உறவினர் குடும்பத்தினருக்கிடையே தகராறு இருந்து வந்ததாம். இந்த நிலையில், சனிக்கிழமை முத்துமாரியிடம், உறவினர்களான சிவக்குமார்(37), அவரது மனைவி முத்துலட்சுமி(27), அடைக்கலம்(27), அவரது மனைவி பூங்கோதை(26) ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 இதில் ஆத்திரமடைந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்ட முத்துமாரி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  சிகிச்சை பலனின்றி முத்துமாரி ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
இதுகுறித்து அன்னவாசல் காவல் ஆய்வாளர் சுமதி வழக்குப் பதிவு செய்து சிவக்குமார், அடைக்கலம், முத்துலட்சுமி, பூங்கோதை ஆகியோரைக் கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.