புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் ரேஷன், ஆதார் அட்டைகளுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கடையை அகற்ற உறுதியளிக்கப்பட்டதால் கலைந்து சென்றனர்.
ஆவுடையார்கோவில் அருகே கொளுவனூர் கிராமத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. அந்தக் கடையை அகற்றக் கோரி மே 3ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து, வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடையை அகற்றுவதாக உறுதியளிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. இதுவரை மதுக்கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில் கிராம மக்கள் ரேஷன், ஆதார் அட்டைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுக்கடையை அகற்றப்படாததால் ரேஷன், ஆதார் அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கப் போவதாக முழக்கங்கள் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆட்சியர் சு.கணேஷ், மதுக்கடையை மூட உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிங்கீதம் சீனிவாச ராவ் படத்தின் டீசர்!

ஜடேஜா சாதனையை சமன்செய்த கே.எல். ராகுல்..! அடுத்து தோனி சாதனைதான்!

நீட்.. ஆடைக்கட்டுப்பாட்டில் புதிய மாற்றம்!
குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

