பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ஊக்கத்தொகை பெற தேசிய திறனாய்வுத் தேர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும்  மாணவர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை

Updated On :5 நவம்பர் 2018, 8:52 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும்  மாணவர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்கான நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வினை 2339 மாணவர்கள் எழுதினர். 
தமிழகம் முழுவதும்  பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி வரை மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்காக  ஆண்டுதோறும் நவம்பரில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. 
அதன்படி புதுக்கோட்டை பிரகதாம்பாள்  அரசு மேல்நிலைப்பள்ளி,  ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  ஆலங்குடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,மணமேல்குடி அரசு  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,  ஆவுடையார் கோயில் அரசு மேல்நிலைப்பள்ளி  என 12 தேர்வு மையங்களில் இத் தேர்வு நடைபெற்றது.  2339 மாணவர்கள் தேர்வு எழுதினர், 274  மாணவர்கள் வரவில்லை. 
ஆலங்குடி அரசு ஆண்கள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற தேர்வை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா. வனஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.