புதுக்கோட்டையில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஆலங்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில், இந்திய ஜனநாயக சங்கத்தின் 15 ஆவது மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா பங்கேற்று பேசினார். கூட்டத்தில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணக்கொள்ளை அதிகரித்துள்ளது. புதுகையில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அன்னவாசலில் அரசு கிரானைட் தொழிற்சாலை, ஆதனக்கோட்டையில் அரசுமுந்திரிஆலை, கீரமங்கலத்தில் வாசனைத் திரவியத் தொழிற்சாலை, ஆலங்குடியில் வனஸ்பதிஆலை என மாவட்டத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி புதிய தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும்.
நீராதாரத்தைஅழிக்கும் தைலமரங்களை அழித்து, பல்லுயிர் காடுகளை உருவாக்க வேண்டும். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் போதுமான மருத்துவர், செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் தமிழகத்தில் நிறைவேற்றக் கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன்,பொருளாளர் ஆ.குமாரவேல் ஆகியோர் அறிக்கைகளை முன்மொழிந்தனர்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.விக்கி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


