அறந்தாங்கியில் தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத் தலைவர் எம்.ரெங்கசாமி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தார். சங்க நடவடிக்கை, ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீடு குறித்து மாநிலச் செயலாளர் ஜி.நாகராஜ் பேசினார்.
இணைச் செயலாளர் வி.பசுபதி, நிர்வாகிகள் பொன்னுசாமி, டி.சுப்பிரமணியன், சாமிக்கண்ணு, சாத்தையா, மெய்யர் உள்ளிட்டோர் பேசினர்.மின்சார வாரிய பணியாளர்களுக்கு 60 ஆண்டு சிறப்புப் பரிசாக 3 சதவீத ஊதிய உயர்வை ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டும். சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, பொருளாளர் கே.மோகனசுந்தரம் வரவேற்றார். முடிவில், கோபாலமூர்த்தி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிலிண்டர் ஜிஎஸ்டி வரியை 5%-ஆக குறைக்க ஹோட்டல் சங்கம் கோரிக்கை

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஏழூர் சப்தஸ்தான புறப்பாடு விழா!

வாக்கு எண்ணும் பணியாளர்களை தேர்தல் ஆணையமே தேர்ந்தெடுக்கலாம்: உச்ச நீதிமன்றம்

6 ரன்கள் தேவையானபோது 6 யார்க்கர் பந்துகளை வீசிய இளம் பாகிஸ்தான் வீரர்..! யார் இந்த ஹுனைன் ஷா?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

