மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மாற்றுத் திறனாளிகள் சங்கக் கூட்டம்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான

Updated On :22 அக்டோபர் 2018, 3:56 am

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் தெ.லட்சுமணன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலர் எஸ்.நம்புராஜன், பொருளாளர் கே.என்.சக்கரவர்த்தி ஆகியோர் அறிக்கைகள் சமர்ப்பித்தனர். 
மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை முடக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளை திருத்துவது, அரசு அலுவலகங்களில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களை பணி நிரந்திரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 30ஆம் தேதி  சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது, மாற்றுத் திறனாளிகள் நலனை புறக்கணிக்கும் ரயில்வே துறையைக் கண்டித்து சென்னை உள்ளிட்ட அனைத்து ரயில்வே கோட்ட அலுவலகங்கள் முன்பு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.