தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

கழனிவாசல் அரசுப் பள்ளியில்  விளையாட்டுப் போட்டிகள்

அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கழனிவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கழனிவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. 
பாரதியார், குடியரசுத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை க.ஜெயந்தி தலைமை வகித்தார். முன்மாதிரி பள்ளி விருது பெற்ற மாங்குடி பள்ளித் தலைமை ஆசிரியர் வி.ஜோதிமணி முன்னிலை வகித்தார். 
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை பேராசிரியர் அ.ரூபி ஜெஸிந்தா போட்டிகளைத் துவக்கி வைத்தார்.
அறந்தாங்கி கல்வி மாவட்டத்திற்குள்பட்ட அரிமளம், அறந்தாங்கி, ஆலங்குடி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட குறுவட்ட  உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். உடற்கல்வி  ஆசிரியர் ஆ.செல்வராஜ், அரிமளம் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரா.பொ.சித்திரைசெல்வன், சுப.சீனிவாசன், எஸ்.ஜீவானந்தம் ஆகியோர் நடுவர்களாக  செயல்பட்டனர். பெற்றோர்ஆசிரியர் கழகத் தலைவர் சி.என்.சி சிவா, மாவட்ட ஒருங்கிணைப்பு  ஆசிரியர் அ.அன்பழகன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், உடற்கல்வி ஆசிரியர்  சி.ராஜேஸ்கண்ணன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.