நுண்ணீர்ப் பாசனத் திட்டத்திற்கு ரூ.22.35 கோடி ஒதுக்கீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்திற்கு ரூ.22.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் சு.கணேஷ்.

Published On :

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்திற்கு ரூ.22.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் சு.கணேஷ்.
புதுகை மாவட்ட தோட்டக் கலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு திட்டப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த அவர் மேலும் கூறியது: தோட்டக்கலைத் துறையின் சார்பில்   விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது.  இதில், திருவரங்குளம் வட்டாரம்,   பாலையூரில் மானாவாரிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.22,500 மானித்தில் பயிரிடப்பட்டுள்ள மா கன்றுகள் பணி,  தெட்சினாபுரத்தில் பிரதமரின் சொட்டுநீர் பாசன இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.1.46 லட்சம் மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள காய்கறி செடிகள் பணி, ரூ.38,743 மானியத்தில் முந்திரி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சொட்டு நீர்ப் பாசன அமைப்பும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அன்னவாசல் வட்டாரம், பெருமாநாட்டில் இயற்கை முறையில்  பயிரிடப்பட்டுள்ள  கீரைகளைப் பார்வையிட்டார். விவசாயிகள் அதிக லாபம் கிடைக்கக் கூடிய பயிர்கள் குறித்து அலுவலர்களை அணுகித் தெரிந்து கொண்டு சாகுபடி செய்ய வலியுறுத்தினார். தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பசுமைகுடில், நிழல்வலைக் கூடங்கள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருவதுடன், மானாவாரி வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 மானியமும் வழங்கப்படுகிறது. 
பிரதமரின்  நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் 2017 முதல் 2019 ஆம் ஆண்டிற்கு  புதுகை மாவட்டத்திற்கு 2792 ஹெக்டேர் பரப்பளவிற்கு ரூ.22.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில், தோட்டக் கலை துணை இயக்குநர் அருணாசலம், உதவி இயக்குநர் குருமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.