எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

திருவப்பூர் கோயில் மாசித் திருவிழா ஜல்லிக்கட்டில் 10 பேர் காயம்

புதுக்கோட்டை திருவப்பூர்  முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி கவிநாடு கண்மாயில்

Updated On :25 பிப்ரவரி 2019, 9:08 am IST

புதுக்கோட்டை திருவப்பூர்  முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி கவிநாடு கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 934 காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன.
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை  பூச்சொரிதலுடன் தொடங்கியது. 
இதையடுத்து கவிநாடு கண்மாயில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி தொடங்கி வைத்தார்.  இதில், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 934 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்குவதற்கு சுமார் 300 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். 
காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர். பாதுகாப்புப் பணிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ் தலைமையிலான போலீஸார் மேற்கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.