புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள மலையப்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் 11 பேர் காயமடைந்தனர்.
தைப்பூசத் தேர்த் திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டின் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து முன்னிலை வகித்தார்.
மாநில மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் போட்டியைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
இதில் மொத்தம் 394 காளைகள் பங்கேற்றன. வாடிவாசல் வழியாகத் தொடங்கி வைக்கப்பட்ட இவற்றை சுமார் 150 மாடு பிடி வீரர்கள் அடக்க முயற்சித்தனர். சிறந்த வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
11 மாடு பிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு வளாகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவக் குழுவினர் இவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வராஜ் தலைமையில் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு

கிளாண்டர்ஸ் தொற்று: தமிழ்நாடு முழுவதும் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு

பதவியேற்ற முதல் நாளே..! கேரள முதல்வர் சதீசன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? எப்படி அறிவது?
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
