நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

புதை சாக்கடைத் திட்ட பணிகளை முறையாக பராமரிக்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை நகரில் செயல்படுத்தப்பட்டுள்ள புதை சாக்கடைப் பணிகளை முறையாக நகராட்சி நிர்வாகம் 

Updated On :23 ஜனவரி 2019, 7:28 am IST

புதுக்கோட்டை நகரில் செயல்படுத்தப்பட்டுள்ள புதை சாக்கடைப் பணிகளை முறையாக நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை நகரம் காமராஜ்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் கிளைப் பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 நகராட்சி நிர்வாகம் அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். கஜா புயலால் சேதமடைந்த சிறுமின் விசை இறைப்பானை சீரமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, எஸ். ஜெகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் வி. சிங்கமுத்து, நகரச் செயலர் மா. உலகநாதன் உள்ளிட்டோரும் பேசினர். முன்னதாக கனகராஜ் வரவேற்றார். முடிவில் எம். குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.