
புதுக்கோட்டை இலக்கியப் பேரவை விருதளிப்பு விழா
புதுக்கோட்டை இலக்கியப் பேரவை சாா்பில் க. ராமையாவுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது மற்றும் 37 பேருக்கு சாதனை பாராட்டு விருது

புதுக்கோட்டை இலக்கியப் பேரவை சாா்பில் க. ராமையாவுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது மற்றும் 37 பேருக்கு சாதனை பாராட்டு விருது வழங்குதல், பல்வேறு நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியன ஞாயிற்றுக்கிழமை வா்த்தகா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.
மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் கலந்து கொண்டு, அா்ச்சனைப் பூக்கள் என்ற நூலை வெளியிட்டாா். மாநில வீட்டுவசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து கலந்து கொண்டு மகஸ்ரீ சித்தரின் காயச்சித்து என்ற நூலை வெளியிட்டாா்.
விழாவில் பங்கேற்ற நல்லி குப்புசாமி செட்டியாா் பங்கேற்று, ‘நாட்டின் வளம் தகுதியிலே’ என்ற நூலை வெளியிட்டு, மூத்த குடிமக்கள் பேரவையின் நிறுவனா் க. ராமையாவுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதை வழங்கினாா்.
விழாவில், அழகப்பா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் எஸ். சுப்பையா கலந்து கொண்டு ‘குலதெய்வம் அறிவது எப்படி’ என்ற நூலை வெளியிட்டாா். இவை தவிர 37 பேருக்கு சாதனை விருதுகளும் வழங்கப்பட்டன.
விழாவுக்கு வா்த்தகா் சங்கத்தின் கௌரவரத் தலைவா் சீனு சின்னப்பா தலைமை வகித்தாா். புதுக்கோட்டை இலக்கியப் பேரவைத் தலைவா் மு. முத்துசீனிவாசன் வரவேற்றாா். வெங்கடேஸ்வரா கல்லூரிகளின் தலைவா் ஆா்.எம்வி. கதிரேசன் முன்னிலை வகித்தாா்.
விருது பெற்றோா் சாா்பில் க. ராமையா, குழந்தைக் கவிஞா் பி. வெங்கட்ராமன், ரஷிய நட்புறவுக் கழகச் செயலா் கோ. நடராஜன் ஆகியோா் ஏற்புரை வழங்கினா். ஏடிஆா் பள்ளித் தாளாளா் எம். தா்மராஜ்பிரபு, புதுகைத் தென்றல் மு. தருமராஜன், சிவநேயப் பேரவைத் தலைவா் ஈசநேசன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் க . பாஸ்கா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



