சமூகப் பொருளாதார ஆய்வுக்கு  பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான "சமூகப் பொருளாதார

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான "சமூகப் பொருளாதார ஆய்வு-2019' மேற்கொள்ளப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் திட்டம், வளர்ச்சி மற்றும் அமலாக்கத் துறையின் வழிகாட்டுதலின்படி, தேசிய புள்ளியியல் அலுவலகம் மற்றும் தமிழக அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்களால் நிகழாண்டில் (ஜன. 2019 முதல் டிச. 2019 வரை) சமூக பொருளாதார ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
அறிவியல் முறைப்படி மாதிரி கிராமங்கள் மற்றும் மாதிரி நகர்ப் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொண்டு, சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் அரசின் திட்டங்களும், கொள்கை முடிவுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
விவசாயக் குடும்பங்களின் வசம் உள்ள நில விவரங்களும், கால்நடை விவரங்களும், அக்குடும்பங்களின் சொத்து, வருமானம், கடன் மற்றும் முதலீட்டு விவரங்களும் சேகரிப்பது இந்த ஆய்வின் பிரதான நோக்கம். அவர்களின் விவசாய முறைகள் பற்றியும், நவீன விவசாயத் தொழில்நுட்பம் மற்றும் அரசின் நலத் திட்டங்கள் பற்றியும், நலத்திட்டங்கள் குறித்து அவர்களின் விழிப்புணர்வு பற்றியும் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளன.
ஆய்வு நடைபெறும் இடங்கள்: புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூகப் பொருளாதார ஆய்வுக்கு குன்றாண்டார்கோவில் வட்டம் மருதூர், புதுக்கோட்டை வட்டம் இச்சடி, வடவாளம், திருமயம் வட்டம் திருமயம், அரிமளம் வட்டம் சாமந்தான்வயல், கைக்குளான்வயல், அறந்தாங்கி வட்டம் கடவாக்கோட்டை, கீழச்சேரி, அரியமரைக்காடு, கந்தர்வக்கோட்டை வட்டம் ஆத்தங்கரைவிடுதி  ஆகிய 10 கிராமப்புற மாதிரிகளும்,  அறந்தாங்கி, கீழமஞ்சக்குடி ஆகிய 2 நகர்புற மாதிரிகளும்  தமிழக அரசுப் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
மேற்படி ஆய்வுக்காக, கள அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் புள்ளி விவரங்கள் சேகரிக்க வரும்போது பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பம் தொடர்பான உண்மையான புள்ளிவிவரங்களை வழங்கி முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com