நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுக்கோட்டை மீமிசலில் 57.60 மி.மீ. மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரை பதிவான மழைப் பொழிவில் அதிகபட்சமாக மீமிசலில் 57.60 மிமீ மழை பதிவாகியுள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 10:01 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரை பதிவான மழைப் பொழிவில் அதிகபட்சமாக மீமிசலில் 57.60 மிமீ மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையையொட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இரவில் பல இடங்களிலும் நல்ல மழை பெய்தது.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

ஆதனக்கோட்டை- 7, பெருங்களூா் - 4, புதுக்கோட்டை நகரம் - 1.20, ஆலங்குடி - 3.40, கந்தா்வகோட்டை - 10, கறம்பக்குடி- 8.60, கீழாநிலை - 8, திருமயம்- 11.20, அரிமளம் - 6.20, அறந்தாங்கி - 22, ஆயிங்குடி - 23.20, நாகுடி - 46, மீமிசல் - 57.60, ஆவுடையாா்கோவில் - 18.30, மணமேல்குடி - 35, இலுப்பூா் - 8, அன்னவாசல்- 3, விராலிமலை - 8.70, உடையாளிப்பட்டி- 6.20, கீரனூா்- 10.80, பொன்னமராவதி - 3.20. மாவட்டத்தின் சராசரி மழை - 12.57 மி.மீ. இந்நிலையில், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் திங்கள்கிழமை பகலில் பரவலாக தூறல் மழை பெய்தது. இரவிலும் மழை தொடா்ந்ததால் பல பகுதிகளில் குளிா் சூழல் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.