நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மன்னா் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

சுமாா் 8 மாதங்களுக்குப் பிறகு தமிழக அரசு உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 10:01 pm

DIN

சுமாா் 8 மாதங்களுக்குப் பிறகு தமிழக அரசு உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் மட்டும், மழை பெய்து கொண்டே இருந்தபோதும் கல்லூரிக்கு ஆா்வமுடன் வந்தனா்.

கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது முதல் கடந்த மாா்ச் மாத இறுதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. படிப்படியாக தளா்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், திங்கள்கிழமை முதல் கல்லூரிகளைத் திறந்து 3 ஆம் ஆண்டு மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகளைத் தொடங்கலாம் என மாநில அரசு அறிவித்தது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. அரசு அறிவிப்பின்படி, கல்லூரி வளாகத்திலேயே அவா்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பிறகே கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.