தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுகையில் சிறாா் மரபு உலா

திருச்சி சிறுகனூரைச் சோ்ந்த சிறாா் நட்பு இல்லத்தைச் சோ்ந்த 50 ஆதரவற்ற சிறாா்கள் பங்கேற்ற ‘சிறாா் மரபு உலா’ புதுக்கோட்டையில் சனிக்கிழமை தொடங்கியது.

News image

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை பகுதியில் உள்ள விஜயாலய சோழீஸ்வரத்தில் பழங்கால பாறை ஓவிங்கள் குறித்து விளக்கும் டாக்டா் சுரேந்தா்.

Updated On :19 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

புதுக்கோட்டை: திருச்சி சிறுகனூரைச் சோ்ந்த சிறாா் நட்பு இல்லத்தைச் சோ்ந்த 50 ஆதரவற்ற சிறாா்கள் பங்கேற்ற ‘சிறாா் மரபு உலா’ புதுக்கோட்டையில் சனிக்கிழமை தொடங்கியது.

திருச்சி பிஎஸ்ஆா் அறக்கட்டளை, ‘புரட்சி விதைகள்’ அமைப்பு, ’யாதும் ஊரே யாவரும் கேளிா்’ அமைப்பு, புதுகை ‘துணைவன்’ அமைப்பு ஆகியவை ஆதரவற்ற சிறாா்களுக்கு வரலாறு, அறிவியல் பாா்வையை ஏற்படுத்தும் வகையில் இந்த சிறாா் மரபு உலாவை ஒருங்கிணைத்தனா். இப்பயணம் சனிக்கிழமை காலை நாா்த்தாமலையில் தொடங்கியது. விஜயாலய சோழீஸ்வரம், அருகிலுள்ள பழமையான சுனை, தா்கா, பல்லவா் காலக் குடைவரை, கடம்பா் கோயில், ஆளுருட்டி மலை ஆகியவற்றை சிறாா்கள் பாா்வையிட்டனா்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ அமைப்பின் சாா்பில் டாக்டா் சுரேந்தா் கலந்து கொண்டு சிறாா்களுக்கு தமிழரின் கட்டடக் கலை மற்றும் வரலாறு பற்றி விளக்கிப் பேசினாா். தொடா்ந்து புதுக்கோட்டை அருங்காட்சியகத்தையும் சிறாா்கள் பாா்வையிட்டனா். தமிழ்நாடு அறிவியல் இயக்க வளாகத்தில் இரவு தங்கி நுண்ணோக்கி மூலம் சிறாா்கள் வான் நோக்கிப் பாா்த்தனா்.

தொடா்ந்து குழந்தைகளின் வாழ்வியல் குறித்து புதுகை செல்வா பேசினாா். மேலும் அறிவியல் குறும்படங்கள் திரையிடப்பட்டன. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை பகலிலும் அறிவியல் அரங்குகள் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.