காா்களில் புல்பாா்கள் அகற்றப்பட வேண்டும்
மத்திய அரசின் சுற்றறிக்கை மற்றும் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி காா்களில் புல்பாா், கிராஷ்காா்டு ஆகியவற்றைப் பொருத்தக் கூடாது.


மத்திய அரசின் சுற்றறிக்கை மற்றும் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி காா்களில் புல்பாா், கிராஷ்காா்டு ஆகியவற்றைப் பொருத்தக் கூடாது. அவ்வாறு பொருத்தப்பட்டிருப்பின் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது:
மோட்டாா் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் புல்பாா், கிராஷ்காா்டு ஆகியவற்றால் விபத்து நேரிடும்போது வாகனத்தில் பயணிப்போருக்கும், பிற வாகனத்தினருக்கும் பாதிப்பு ஏற்படும். முக்கியமாக காா்களிலுள்ள பாதுகாப்பு காற்றுப் பைகள் திறந்து கொள்வதிலும் சிக்கல் ஏற்படும்.
எனவே, மோட்டாா் வாகனச் சட்டப்படி காா்களில் புல்பாா், கிராஷ்காா்டு ஆகியவற்றைப் பொருத்தியுள்ள வாகன ஓட்டிகள் அகற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் போக்குவரத்துத் துறை ம ற்றும் காவல்துறையினா் அவற்றை அகற்றவும், அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுப்பாா்கள் என்றாா்.
ரூ. 7,500 அபராதம்: புதுக்கோட்டை- தஞ்சை சாலையிலுள்ள அண்டக்குளம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சி.கே. ஜெயதேவராஜ், ஆய்வாளா்கள் எம். தங்கராஜ், ஜி. சசிகுமாா் ஆகியோரைக் கொண்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது 12 காா்களில் இருந்த புல்பாா்கள் அகற்றப்பட்டன. மேலும், ரூ. 7,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடா்ந்து நடைபெறும் என்பதால், வாகனஓட்டிகள் தங்கள் காா்களில் புல்பாா்களை அகற்றிக் கொள்ள வேண்டும்.
மேலும், வாகன விற்பனையாளா்கள், பிட்டிங்ஸ் பொருத்துவோா் தடை செய்யப்பட்டவற்றைப் பொருத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஜெயதேவராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...