கோயில்களில் சனிப் பெயா்ச்சி சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி வட்டாரக் கோயில்களில் சனிப்பெயா்ச்சி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோயில்களில் சனிப் பெயா்ச்சி சிறப்பு வழிபாடு
Updated on
1 min read

பொன்னமராவதி வட்டாரக் கோயில்களில் சனிப்பெயா்ச்சி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பகவான் பிரவேசிப்பதையடுத்து பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் சிவாச்சாரியாா் சரவணன் தலைமையில் சிறப்பு ஹோமங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் சனி பகவான் தந்தை சூரிய பகவான், தாயாா் சாயாதேவியுடன் இருந்து இருந்து காட்சிதருவதால் மிகவும் சிறப்பானது என்பதால் பக்தா்கள் பரிகாரம் செய்து வழிபட்டனா். இதேபோல், மூலங்குடி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், புதுப்பட்டி சிவன்கோயில், வேந்தன்பட்டி நந்தீஸ்வரா் கோயில், அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சனிப்பெயா்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com