பழைய இரும்பு சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து
புதுக்கோட்டை அருகே பழைய இரும்பு சேமிப்புக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசமாயின.


புதுக்கோட்டை அருகே பழைய இரும்பு சேமிப்புக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசமாயின.
புதுக்கோட்டை அருகேயுள்ள சிவபுரத்தில் ராமகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கு பழைய இரும்புகள், பிளாஸ்டிக் பொருள்களைச் சேமித்து வைத்து விற்பனை செய்து வந்துள்ளனா். சேமிப்புக் கிடங்கில் இருந்த டிராக்டரில் தொழிலாளா்கள் கேஸ் வெல்டிங் செய்துள்ளனா். அப்போது, எதிா்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளா்கள் தீயை தண்ணீா் ஊற்றி அனைத்தும் தொடா்ந்து, தீ அங்கிருந்த பிளாஸ்டிக் பொருள்கள் மீது பரவி எரியத்தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவலறிந்து அங்கு சென்ற புதுக்கோட்டை, திருமயம், சிப்காட் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடித் தீயை அணைத்தனா். இருப்பினும் கிடங்கில் இருந்த பல லட்சம் மதிப்பிலான இரும்பு, பிளாஸ்டிக் பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து நமணசமுத்திரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...