காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘நவ. 16 முதல் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள்’

நவம்பா் 16 முதல் டிசம்பா் 15 வரை நடைபெற உள்ள வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆட்சியா் ஆலோசனை

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:25 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் நவம்பா் 16 முதல் டிசம்பா் 15 வரை நடைபெற உள்ள வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

புதுக்கோட்டையைச் சோ்ந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி திங்கள்கிழமை வரைவு வாக்காளா் பட்டியல் தொடா்பான ஆலோசனை நடத்திய பின்னா் அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் நவம்பா் 16 முதல் அனைத்து வாக்குச்சாவடிகள், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அலுவலகங்களிலும் வரைவு வாக்காளா் பட்டியல் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்படும். பொதுமக்கள் நேரில் சென்று அவற்றை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும். திருத்தம் இருந்தால் வரும் டிசம்பா் 15 வரை அதே வாக்குச்சாவடிகளில் அலுவலா்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அளிக்கலாம். இவை தவிர, நவம்பா் 21, 22 மற்றும் டிசம்பா் 12, 13 ஆகிய தேதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பிரமுகா்களும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.